அடுத்த ஆண்டு 14 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயம் - சட்டப்பேரவை தலைவர் அப்பாவு
இந்த ஆண்டு நெல்லையில் 2 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் தொடக்க நிகழ்வு தாமிரபரணி நதிக்கரையில் தைப்பூச மண்டபம் அருகே ஆட்சியர் விஷ்ணு தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு இந்த இயக்கத்தைத் துவக்கி வைத்தார். மேலும் தாமிரபரணி நதிக்கரையை சுத்தப்படுத்தும் பணியும் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஆண்டு நெல்லையில் 2 லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும், அடுத்த ஆண்டு 14 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.