இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காரைக்குடியில் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-14 19:00 GMT

காரைக்குடி,

விலைவாசி உயர்வை கண்டித்தும், நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. காரைக்குடி பழைய பஸ் நிலையத்திலிருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் கண்ணகி தலைமையில் ஊர்வலமாக பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை நோக்கி வந்தனர். ஆனால் அண்ணா சிலை அருகிலேயே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அப்பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் மாவட்ட செயலாளர் கண்ணகி உள்பட 80 பேரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்