மணிப்பூரில் நடந்த கொடூரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீர் ரயில் மறியல் போராட்டம்

மணிப்பூரில் நடந்த கொடூரத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் விழுப்புரத்தில் திடீர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-25 08:44 GMT

விழுப்புரம்,

மணிப்பூரில் மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இது பல இடங்களில் பரவி கலவரம் வெடித்தது. வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மேலும் பழங்குடி சமூக பெண்கள் இருவரை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் இழுத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் விழுப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திடீர் ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்