ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் : முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் ,பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்

Update: 2022-12-02 09:24 GMT

பெர்த்,

ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 65 ரன் எடுத்தார். 3-வது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுஸ்சேன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 154 ரன்னும், ஸ்டீவ் சுமித் 59 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது. லபுஸ்சேன் அபாரமாக ஆடி இரட்டை சதம் எடுத்தார். அவர் 348 பந்துகளில் 20 பவுண்டரி, 1 சிக்சருடன் 200 ரன்னை கடந்தார் . 204 ரன்கள் எடுத்த நிலையில் லபுஸ்சேன் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 402 ஆக இருந்தது. இதே போல மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்து அசத்தினார் . மறுபுறம் சதம் அடிப்பார் என எதிர்ப்பார்க்கப்ட்ட ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 99 ரன்களில் ஆட்டமிழந்தார் இறுதியில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 598 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது . ஸ்மித் 200 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீசும் சிறப்பான தொடக்கம் கண்டது. 2-வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 25 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் எடுத்தது. கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் 18 ரன்களுடனும் , தேஜ்நரின் சந்தர்பால் 47 ரன்களுடனும்,களத்தில் இருந்தனர்

 இன்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது சிறப்பாக விளையாடிய அரைசதம் அடித்த தேஜ்நரின் சந்தர்பால் 51 ரன்களிலும் , கிரேக் பிராத்வெய்ட் 64 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.அந்த அணியின் ஜெர்மன் பிளாக்வுட் 36 ரன்களிலும் ,கைல் மேயெர்ஸ் 21 ரன்களும் ,ஜேசன் ஹோல்டர் 27 ரன்களும் ,புரூக்ஸ் 33 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.

இதனால் 283 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் ,பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.இதனை தொடர்ந்து 315 ரன்கள் முன்னிலையுடன் 2வது ஆஸ்திரேலியா ஆடி வருகிறது .

Tags:    

மேலும் செய்திகள்