சூரிய சக்தி, காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு புதிய சாதனை

காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி உற்பத்தியில் தமிழகம் புதிய சாதனை படைத்துள்ளது.

Update: 2024-08-27 16:05 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் 8,574 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1,462 மெகாவாட் கடந்த 2023-24ம் ஆண்டில் இணைக்கப்பட்டதாகும்.

ஒவ்வொரு மாதமும், குறைந்தபட்சம் 100 மெகாவாட் மின்சாரம் சூரிய சக்தி மூலம் புதிதாக உற்பத்தி செய்யப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் சூரிய சக்தி மின் உற்பத்தியின் அளவு, கடந்த ஞாயிற்றுக்கிழமை 5,648 மெகாவாட்டாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அதே போல் தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காற்றாலை மின் உற்பத்தி 7.81 கோடி யூனிட் ஆக அதிகரித்தது. அன்றைய தினம் தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தில் சுமார் 35 சதவீதம், காற்றாலை மற்றும் சூரிய மின் சக்தி மூலம் பூர்த்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Full View


Tags:    

மேலும் செய்திகள்