தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது - விருதுநகர் மாவட்டம் முதலிடம் - முழு விவரம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

Update: 2023-05-08 04:37 GMT


Live Updates
2023-05-08 07:56 GMT

சென்னை, பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார். தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது.



 


2023-05-08 07:50 GMT

பிளஸ் 2 தேர்வில் தமிழ்நாட்டில் முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்!

* விருதுநகர் 97.85%

* திருப்பூர் 97.79%

* பெரம்பலூர் 97.59%

* கோவை 97.57%

* தூத்துக்குடி 97.36%

கடைசி 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள்!

* மயிலாடுதுறை 90.15%

* கிருஷ்ணகிரி 89.69%

* திருவண்ணாமலை 89.8%

* வேலூர் 89.2%

* ராணிப்பேட்டை 87.3%

2023-05-08 06:50 GMT

"விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு வரும் நாளை (மே 9) காலை 11 மணி முதல் 13ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள்துறை அறிவித்துள்ளது.

2023-05-08 06:26 GMT

பிளஸ் 2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். வணிகவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்த மாணவி 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். அனைத்து பாடத்திலும் சதம் வாங்கி அசத்தி உள்ளார்.

2023-05-08 06:18 GMT

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

➤2019-ல் 91.30% 2020-ல் 92.34% 2022-ல் 93.80%, 2023-ல் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

➤ கொரோனா தொற்றால் 2021-ல் மட்டும் 100% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

2023-05-08 06:17 GMT

➤ பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆண்கள் பள்ளிகளில் 87.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2023-05-08 06:16 GMT

➤ பிளஸ் 2 தேர்வில் சிறைவாசிகள் 90 பேர் தேர்வெழுதிய நிலையில் 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

2023-05-08 05:48 GMT

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 47,934 பேர் தோல்வி அடைந்தனர். தமிழகத்தில் பிளஸ் 2 துணைத்தேர்வு ஜூன் 19-ம் தேதி தொடங்குகிறது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

2023-05-08 05:32 GMT

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 326 அரசு மேல்நிலை பள்ளிகளில் 100% தேர்ச்சி சதவீதத்தை பெற்று அசத்தி உள்ளது.

➤2,767 மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

➤ அரசு பள்ளிகள் - 89.80%

➤ அரசு உதவி பெறும் பள்ளிகள் - 95.99%

➤ தனியார் பள்ளிகள் - 99.08%

2023-05-08 05:29 GMT

கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 8,544 மாணவர்கள் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள்;

➤ கடந்த ஆண்டு : 23,957

➤ இந்த ஆண்டு : 32,501

Tags:    

மேலும் செய்திகள்