பூண்டி ஏரியில் உபரிநீர் திறப்பு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கனமழையால் உபரிநீர் திறப்பு ஆயிரம் கன அடியில் இருந்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-12 12:21 GMT

சென்னை,

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும் சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இன்று காலை 1,290 கன அடியாக இருந்த நீர் வரத்து 3,500 கன அடியாக அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் உபரிநீர் திறப்பு ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 3,500 கன அடியிலிருந்து 5,850 கன அடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது

இந்த சூழலில் பூண்டி ஏரி திறக்கப்பட்டுள்ளதால், சென்னை மணலி, புதுநகர், எண்ணூர் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 60 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையைப் பொறுத்து படிப்படியாக உபரி நீர் அதிகரிக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்