விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

சிப்காட்டிற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளியில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-26 18:45 GMT

ராயக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய 3 ஊராட்சிகளில் 5-வது சிப்காட் அமைக்க அரசு 3 ஆயிரத்து 34 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக சூளகிரி தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக தீர்வு ஏற்படவில்லை.

இந்தநிலையில் சிப்காட்டிற்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் உத்தனப்பள்ளியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் முருகேஷ் தலைமை தாங்கினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை செயலாளர் பெருமாள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து மாலை ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் இந்த காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்