திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நிறுத்தாவிட்டால் போராட்டம்

ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தெரிவித்தார்.

Update: 2022-12-03 18:45 GMT

மத்திகிரி

ஓசூர், அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகே, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கட்டிடம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பகுதி மக்கள், விளையாட்டு வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி, விளையாட்டு மைதானத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், இந்த இடம் ஒரு டிரஸ்டுக்கு சொந்தமான இடம். இந்த இடத்தில் மாநகராட்சி கட்டிடம் கட்டுவதற்கோ, கல்லூரி கட்டுவதற்கோ அனுமதி அளிக்கவில்லை. இந்த இடத்தில் சர்வதேச விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அதன் மூலம் கிரிக்கெட், ஆக்கி, ஸ்கேட்டிங், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களை இங்கு நடத்த வரைவு போடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இந்த இடத்தில் திடக்கழிவு பிரிக்கும் கட்டிடம் கட்டும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இந்த பணியை உடனே நிறுத்த வேண்டும். இல்லையென்றால் கட்சி தலைமையின் அனுமதி பெற்று போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், தெற்கு பகுதி செயலாளர் பி.ஆர்.வாசுதேவன், மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயபிரகாஷ், நகரமைப்பு குழு தலைவர் அசோகா, அ.தி.மு.க. கிழக்கு பகுதி செயலாளர் ராஜி, முன்னாள் யூனியன் தலைவர் கந்தப்பா, இளம் பாசறை மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், வட்ட செயலாளர் சந்திரன், நாகொண்டப்பள்ளி கூட்டுறவு வங்கி தலைவர் .சாக்கப்பா, முன்னாள் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தலைவர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்