மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்

கிருஷ்ணகிரி, மத்தூரில் மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-11 18:45 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி, மத்தூரில் மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

மனித சங்கிலி

கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முதல் பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வரை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் நாஞ்சில் ஜேசுதுரை, நாராயணமூர்த்தி, நகர தலைவர் லலித் ஆண்டனி, மாவட்ட துணைத்தலைவர் ரகமத்துல்லா, பொதுச்செயலாளர் அப்சல், நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன், த.மு.மு.க. மாவட்டத் தலைவர் நூர்முகமது, தி.க., மாவட்ட செயலாளர் மாணிக்கம், ம.தி.மு.க. மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர தலைவர் விவேக், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் கோவேந்தன், தொகுதி செயலாளர் தியாகு, ஒன்றிய செயலாளர் கனகமுட்லு மாது உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், சாதி, மத, மொழி வேற்றுமையைக் கடந்து அனைத்து ஜனநாயக மதசார்ப்பற்ற கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் ஒன்றிணைந்து மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம். சமூக நீதியை பாதுகாப்போம் என்று கோஷங்கள் எழுப்பினர்.

மத்தூர்

மத்தூர் பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி, பொன் சதீஷ் (எ) சேட்டு ஆகியோர் தலைமையில் நடந்தது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் முனீராவ், மாநில துணைச்செயலாளர் அம்பேத்கர், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இளஞ்சூரியன், தி.க. ஒன்றிய செயலாளர் தனஜெயன், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் மாது, தனஞ்ஜெயன், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மசுத் அகமத், த.மு.மு.க. கிளைச்செயலாளர் கமல் பாஷா, புரட்சிகர இளைஞர் முன்னணி நிா்வாகி செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ம.தி.மு.க. நிர்வாகி செல்வராஜ், திராவிட இயக்கத்தை சேர்ந்த முருகேசன், சிலம்பரசன் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்