தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வருகிற 20-ந் தேதி நடக்கிறது

Update: 2023-09-13 18:45 GMT

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி வருகிற 20-ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் கலந்துகொண்டு மாவட்ட அளவில் வெற்றிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. கல்லூரி முதல்வர்கள் அவர்தம் கல்லூரி மாணவர்களிடையே முதற்கட்டமாக பேச்சுப்போட்டிகள் நடத்தி கல்லூரிக்கு 2 பேரைத் தேர்வு செய்து அனுப்பவேண்டும். போட்டிகள் அண்ணாவும் மேடைபேச்சும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெல்லும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் ஆகிய தலைப்புகளில் நடைபெறும். போட்டிகள் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் 20.09.2023 அன்று நடைபெற உள்ளன. கல்லூரி மாணவர்கள் காலை 10.15 மணிக்கு வருகையை உறுதி செய்திடுதல் வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்