கேரளாவுக்கு படகில் கடத்த முயன்ற 910 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கேரளாவுக்கு படகில் கடத்த முயன்ற 910 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

Update: 2022-11-10 20:26 GMT

புதுக்கடை, 

கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வேணுகோபால் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அரசின் மானிய விலை மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு படகை சோதனை செய்தனர். அந்த படகில் 26 கேன்களில் 910 லிட்டர் மானிய விலை மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்த முயன்றது ெதரிய வந்தது. இதையடுத்து வருவாய்த்துறை ஊழியர்கள் மண்எண்ணெய்யை பறிமுதல் செய்து வள்ளவிளை அரசு குடோனில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்