சாலையை சீரமைக்க கோரிக்கை

சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-24 21:32 GMT

அருப்புக்கோட்டை, 

அருப்புக்கோட்டை தங்கசாலை தெரு பகுதியில் இருந்து தொடக்கப்பள்ளி சாலை வழியாக எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை கடந்த சில மாதங்களுக்கு முன் நகராட்சி சார்பில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலைகள் தோண்டும் பணி நடைபெற்றது. குழாய் பதிக்கும் பணிகள் முடிந்தும் தோண்டப்பட்ட சாலைகள் அனைத்தும் முறையாக மூடப்படாமல் குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள், மோட்டார் சைக்கிள்கள், கார்கள், லாரிகள் சென்று வருகின்றன. சேதமடைந்த சாலையால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதேபோல நகரின் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் சரியாக மூடப்படாமல் உள்ளன. இந்த சாலைகள் அனைத்தையும் உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்