கண்மாய் ஆக்கிரமிப்பு அகற்றம்

கண்மாயில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது

Update: 2023-06-30 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டை தாலுகா சருகனி அருகே உள்ள திருவேகம்பத்து வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட களத்தூர் சின்னக்கண்மாய் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து தாசில்தார் செல்வராணி தலைமையில் இன்ஸ்பெக்டர் அழகர் மற்றும் போலீசார் 8 விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்திருந்த 12 ஏக்கர் பரப்பளவு கண்மாய் நிலங்களை மீட்டனர். அப்போது வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்