ராமேஸ்வரம்: தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? அல்லது கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? நீதிபதிகள் காட்டம்
ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை,
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் சாக்கடை கலப்பதை தடுக்க கோரிய வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? அல்லது கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? என நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர். ராமேஸ்வரம் கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மாவட்ட கலெக்டர், நகராட்சி நிர்வாகம், கோவில் இணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.