நாமக்கல் மாவட்டத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-07-19 16:11 GMT

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்றும், நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) தலா 8 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 10 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 91.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 65 சதவீதமாகவும் இருக்கும்.

அப்ளாநச்சு தாக்கம்

சிறப்பு வானிலையை பொறுத்தவரையில், கால்நடை தீவனங்களில் அப்ளா நச்சு இருந்தால், உற்பத்தி திறன் மட்டும் இன்றி கல்லீரல் செயல்பாடு, கருச்சிதைவு உள்ளிட்ட இனப்பெருக்க கோளாறு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற உடல்நல குறைவை ஏற்படுத்துகின்றன.

கடலை புண்ணாக்கு மற்றும் மக்காச்சோள தானியத்தில் அப்ளா டாக்சின்-பி நச்சு பெரும்பாலும் காணப்படுகிறது. தீவனத்தில் உள்ள இந்த நச்சு பாலின் மூலம் மனிதர்களையும் பாதிக்கிறது. வேக வைப்பதாலோ அல்லது வெயிலில் உலர வைப்பதாலோ அப்ளா நச்சுகள் அழிவது இல்லை. இந்திய தர நிர்ணய அளவுகளின் படி கால்நடை தீவனங்களில் குறைந்த அளவு அப்ளா நச்சு இருக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்