தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.;
சென்னை,
தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மற்றும் ஒரு எஸ்.பி-ஐ பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு கூடுதல் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்விவரம் பின்வருமாறு:-
* கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு டி.ஜி.பி.யாக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* ரெயில்வே காவல்துறை டி.ஜி.பி.யாக வன்னியபெருமாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
* மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் ஐ.ஜி.யாக எஸ்.மல்லிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறை ஐ.ஜி.யாக அபிஷேக் தீக்ஷித் நியமனம்.
* குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை எஸ்.பி.யாக முத்தமிழ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.