திருமணம் செய்து வைக்கக்கோரி தீக்குளித்த வாலிபர் உயிரிழப்பு
திருமணம் செய்து வைக்கக்கோரி தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா பெரியபாலியப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமு. அவரது மகன் விஜயகுமார் (வயது 29). இவருக்கு சிறு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டு வலது கை, காலில் சற்று ஊனம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இவர், தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி அடிக்கடி அவரது வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி அவர் தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி கொலை மிரட்டல் விடுத்து தனக்கு தானே உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவண்ணாமலை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.