'தி.மு.க. ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா?' - தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

கவர்னரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எல்லா இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.;

Update:2025-01-07 22:01 IST

சென்னை,

பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களுக்கு எப்போதுமே அனுமதி வழங்கப்படுவதில்லை என முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு எப்போது வேண்டுமானாலும் அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு எப்போதுமே அனுமதி வழங்கப்படுவதில்லை. அதுமட்டுமின்றி, பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று பெண் தலைவர்கள் தெருவில் இறங்கி போராடுவதற்கும் அனுமதி கிடையாது.

தேசிய கீதம் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு கவர்னர் கண்டனத்தை பதிவு செய்தார். ஆனால் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எல்லா இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். ஆனால் தி.மு.க. ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா?"

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்