பாடகி இசைவாணி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத்

நீட் தேர்வை மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.

Update: 2024-11-27 21:23 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

உலக மக்கள் அனைவரும் போற்றி வணங்கும் சபரிமலை அய்யப்ப சுவாமியை பற்றி, பாடகி இசைவாணி அவதூறாக பாடியது பக்தர்களின் மனது புண்படும் வகையில் உள்ளது. அவரது பாடலை தமிழக அரசு தடை செய்ய வேண்டும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மெக்கா, மதினா, ஜெருசேலம் போன்ற பகுதிகளுக்கு புனித பயணம் மேற்கொள்ளபவர்களுக்கு எப்படி பயண நிதி வழங்கப்படுகிறதோ அதேபோல சபரிமலைக்கு தரிசனம் செய்ய செல்லும் தமிழக பக்தர்களுக்கும் பயண நிதி வழங்க வேண்டும். கேரள மாநிலம் சபரிமலையில் அய்யப்ப சாமி கோவில் அருகாமையில் தமிழ்நாடு பவனம் கட்டி தமிழக பக்தர்கள் சென்று தங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தவெகதலைவர் விஜய் நீட் தேர்வு வேண்டாம் எனக் கூறி வருகிறார். ஆனால் மக்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டனர். ஏழை எளிய மாணவ, மாணவிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டருக்கு படிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்