உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகர் அஜித்
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.;
சென்னை,
தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முகாம் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை உதயநிதி ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்த நிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அவருக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார், கமல்ஹாசன், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோர் தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.