திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.;
திருச்சி,
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக வலுப்பெரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கனமழை, புயல் எச்சரிக்கை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் நாளையும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.