ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

ஈவிகேஎஸ் இளங்கோவனை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2024-11-27 16:55 GMT

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை நேரில் சென்று நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்