நாமக்கல் மாவட்டத்தில் இன்று சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு ஆராய்ச்சி நிலையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

Update: 2022-06-17 16:47 GMT

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்து உள்ளது.

வானிலை

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று 15 மி.மீட்டரும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) 5 மி.மீட்டரும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) 4 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 21-ந் தேதி மழை பெய்ய வாய்ப்பு இல்லை. இன்று முதல் 4 நாட்களுக்கு மணிக்கு 10 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இன்று தெற்கு திசையில் இருந்தும், நாளை முதல் 3 நாட்களுக்கு தென் மேற்கு திசையில் இருந்து காற்று வீசும்.

அதேபோல் வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 96.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 65 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 45 சதவீதமாகவும் இருக்கும்.

கனமழை

சிறப்பு வானிலையை பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று மாவட்டத்தில் சில இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த வாரம் இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சி மற்றும் மேல் மூச்சுக்குழல் அயற்சியால் பாதிக்கப்பட்டு இறந்தது கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே பண்ணையாளர்கள் தகுந்த கோடை கால பராமரிப்பு முறைகளை கையாள வேண்டும். தீவனத்தில் நுண்ணூட்டச் சத்துக்களை உபயோகிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்