சீறிப்பாய்ந்த மாட்டுவண்டிகள்
சாயல்குடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
சாயல்குடி,
சாயல்குடி அருகே காணிக்கூர் ஊராட்சி பெருமாள் தலைவனேந்தல் கிராமத்தில் பகவதி அம்மன், பாம்புலம்மன், கருப்பணசாமி, முனீஸ்வரர், விநாயகர், பாலமுருகன் கோவில் வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதற்கு கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமை தாங்கினார்.. காணிக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் தென்னரசி செல்லப்பாண்டியன், கோவிலாங்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை பூங்குளத்தான் ஏ.டி.எம் ஏனாதி என்பவரது மாடும், 2-வது பரிசு சிங்கிலிபட்டி சிங்குச்சாமி என்பவரது மாடும், 3-வது பரிசை அம்பலம் கேரளா என்பவரது மாடும், 4-வது பரிசை கள்ளந்திரி மாடும் பெற்றது.
சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை பூங்குளத்தான் ஏ.டி.எம் என்பவரது மாடும், 2-வது பரிசை இருவேலி கிராமத்தைச் சேர்ந்த சிக்கந்தர் என்பவர் மாடும், 3-வது பரிசை ஏனம்பட்டி ரவி என்பவர் மாடும், 4-வது பரிசை மறவர் கரிசல்குளம் கருப்புத்துறை மற்றும் லக்கம்பட்டி மாரீஸ்வரி என்பவரது மாடுகளும் பெற்றன.
இதேபோல் பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.