பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி
கூடலூரில் பள்ளி மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி நடந்தது.
கூடலூர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு வினாடி-வினா போட்டி கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார். கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், தலைமை ஆசிரியர் அய்யப்பன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். மாவட்ட துணை செயலாளர் பரமேஸ்வரன் வரவேற்றார். முடிவில் மணிவாசகம் நன்றி கூறினார்.
இதில் 37 பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் 300 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த கவிதா, கருணாநிதி உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறும்போது, கல்வி மாவட்ட அளவில் நடத்தப்படும் வினாடி-வினா போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள் என்றனர்.