தர்மபுரியில்சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

Update: 2023-04-17 19:00 GMT

தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், சத்துணவு ஊழியர்களின் வாழ்க்கையில் முதல்-அமைச்சர் ஒளியேற்ற வலியுறுத்தியும் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் காவேரி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராமன், மஞ்சுளா, அனுசுயா, வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் தேவகி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் புகழேந்தி, இளவேனில், பிரபாகரன், சங்கர், ஜெயவேல், மகேஸ்வரி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும். 6 மாத காலமாக வழங்காமல் உள்ள மானிய தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் மகேஸ்வரி நன்றி கூறினார். இதில் ஏராளமான சத்துணவு ஊழியர்கள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் வளர்மதி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்