விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீசாரின் கொடி அணி வகுப்பு

கரூரில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போலீசாரின் கொடி அணி வகுப்பு நடந்தது.

Update: 2022-08-26 18:10 GMT

கொடி அணி வகுப்பு

இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் இந்து அமைப்பை சேர்ந்த பல்வேறு அமைப்புகள் சார்பில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு 3 நாட்களுக்கு பிறகு ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்க உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் கலவரங்களை தடுக்க பயன்படுத்தும் உடைகளை அணிந்து நேற்று கரூரில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

முக்கிய வீதிகள் வழியாக...

கரூர் 80 அடி சாலையில் இருந்து தொடங்கிய இந்த கொடி அணிவகுப்பானது முக்கிய வீதிகளான மனோகரா கார்னர், ஜவகர் பஜார், தலைமை தபால் நிலையம் வழியாக சென்று 5 ரோடு பகுதியில் நிறைவடைந்தது. எந்த அசம்பாவித சம்பவங்களைதடுப்பதற்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் போலீசார் தயாராக உள்ளனர் என்பதை உணர்த்தும் வகையில் இந்த கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்