பன்றிகளை உரிமையாளர்கள் பட்டியில் அடைத்து வளர்க்க வேண்டும்

திருக்கடையூர் ஊராட்சியில் பன்றிகளை உரிமையாளர்கள் பட்டியில் அடைத்து வளர்க்க வேண்டும் என அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-02-24 18:45 GMT

பொறையாறு:

திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பலவேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இங்கு பழைய ரெயில் நிலையம் அருகில் 500-க்கும் மேற்பட்ட பன்றிகள் சுற்றித்திரிக்கின்றனர். இந்த பன்றிகள் நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. பன்றிகளை பிடிக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு தரங்கம்பாடி தாசில்தார் புனிதா தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் பாலமுருகன், செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், பொறையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திருக்கடையூர் ஊராட்சி தலைவர் ஜெயாமாலதிசிவராஜ், ஒன்றிய குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் துளசிரேகாரமேஷ், விவசாயிகள் மற்றும் பன்றி வளர்ப்பவர்கள் கலந்து கொண்டனர். அடுத்த மாதம்(மார்ச்) 10.ந்தேதிக்குள் பன்றிகளை பட்டியில் அடைத்து அதன் உரிமையாளர்கள் வளர்க்க வேண்டும். இதை மீறி பொதுவெளியில் சுற்றித்திரிந்தால் பன்றிகள் பிடிக்கப்படும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை இரு தரப்பினரும் ஏற்று கொண்டனர்.

முடிவில் திருக்கடையூர் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்