ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்கள் நீதிமன்றம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

Update: 2022-11-13 19:44 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதனை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர் ெதாடங்கி வைத்தார். மக்கள் நீதிமன்றத்தில் 6,048 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 2,003 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.11 கோடியே 9 லட்சத்து 26 ஆயிரத்து 305 நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவிடப்பட்டது. இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு நீதிபதி கந்தகுமார், அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்