ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம்

ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம்

Update: 2023-01-04 18:45 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் செட்டிப்புலம் ஊராட்சி உள்ளது. இங்கு இயங்காத நூலகம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அந்த பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் தகவல் உரிமை சட்டத்தின் படி தகவல் கேட்டு உள்ளார். இதற்கு தகவல் உரிமை சட்டத்தில் தகவல் அலுவலரும், ஊராட்சி செயலாளருமான சாந்தி பதில் அளிக்கும் போது, தவறான தகவலை மனுதாரருக்கு அளித்துள்ளார். இதுகுறித்து மனுதாரர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜுவிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கர், ஊராட்சி செயலாளர் சாந்தியை மருதூர் வடக்கு ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்