கணவர் சாவுக்கு நீதி கிடைக்கவில்லை:"குழந்தைகளுடன் கருணைக்கொலை செய்து விடுங்கள்"கலெக்டரிடம் பெண் மனு

கணவர் சாவுக்கு நீதி கிடைக்காததால் குழந்தைகளுடன் கருணைக்கொலை செய்து விடுங்கள் என்று கலெக்டரிடம் பெண் மனு ெகாடுத்தார்.

Update: 2022-12-26 18:45 GMT

தேனி அருகே உள்ள உப்புக்கோட்டையை சேர்ந்த கண்ணன் மனைவி புவனேஸ்வரி. இவர், தனது 3 குழந்தைகளுடன் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். கலெக்டர் முரளிதரனிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், "எனது கணவரை 3 பேர் கூலி வேலைக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றனர். அங்கு 50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். அப்போது சாதிய பாகுபாட்டுடன் அவருக்கு தண்ணீர் கொடுக்க மறுத்து விட்டனர். இதில் அவர் இறந்து விட்டார். இதுகுறித்து புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது கணவர் சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும். அல்லது எங்கள் அனைவரையும் கருணை கொலை செய்து விடுங்கள்" என்று கூறப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்