பள்ளி மாணவர்களுக்கு தேசியக்கொடி

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் ஏற்ற பள்ளி மாணவர்களுக்கு தேசியக்கொடியை கலெக்டர் வழங்கினார்.

Update: 2022-08-06 17:20 GMT
சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் ஏற்ற பள்ளி மாணவர்களுக்கு தேசியக்கொடியை கலெக்டர் வழங்கினார்.

தேசியக்கொடி

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியினை ஏற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியினை ஏற்றி, விழிப்புணர்வு ஏற்படுத்திடும் நோக்கில் சிவகங்கையை அடுத்த கீழப்பூங்குடி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தேசியக்கொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு தேசியக்கொடியை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:- இந்திய திருநாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, அதனை 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெரு விழாவாக அரசால் கொண்டாடப்பட உள்ளது.

வீடுகளில் ஏற்ற வேண்டும்

தமிழகம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் வருகிற 13, 14 மற்றும் 15-ந் தேதி தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, அனைவரின் பங்களிப்பையும் அளித்திடும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது இங்கு தேசியக்கொடி வழங்கப்பட்டு வருகிறது. இந்த கொடியை மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் இணைந்து வீடுகளில் ஏற்றவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் வானதி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி, ஊராட்சி மன்றத்தலைவர் சண்முகவள்ளி, பள்ளி தலைமையாசிரியர் முனியாண்டி, பள்ளி மேலாண்மைக்குழுவினர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்