தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

வேதாரண்யத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடந்தது.

Update: 2022-12-02 18:45 GMT

வேதாரண்யம்,:

வேதாரண்யத்தில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.

அறிவியல் மாநாடு

வேதாரண்யத்தில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க நாகை மாவட்ட தலைவர் ஆரிப் தலைமை தாங்கினர். மாவட்ட கல்வி அலுவலர்கள் செல்வராஜ், கார்த்திகேஷன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். மாநாட்டு கல்வி ஒருங்கிணைப்பாளர் முத்துவேல் பேசினார். நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

பரிசளிப்பு விழா

மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்துகொண்டு மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழும் கேடயம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், தாசில்தார் ஜெய்சீலன், தனி தாசில்தார் ரமேஷ் உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகளும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

15 படைப்புகள் தேர்வு

மாநாட்டில் 61 பள்ளிகளைச் சேர்ந்த 267 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் 145 படைப்புகளை மாணவ, மாணவர்கள் சமர்ப்பித்தனர். அதில் தூத்துக்குடியில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு 15 படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்