சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்த நகராட்சி ஊழியர்கள்

பெரியகுளத்தில் சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.

Update: 2022-11-17 18:45 GMT

பெரியகுளம் நகர் பகுதியில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிந்து வருகின்றன. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு கீதா உத்தரவின் பேரில் போலீசார் மற்றும் நகராட்சியினர் நகர் பகுதியில் சுற்றித்திரிந்த 9 மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு மாடுகள் கட்டி வைக்கப்பட்டு தீவனங்கள் வழங்கப்பட்டது. பின்னர் வேன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோசாலைக்கு மாடுகள் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்