மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட எம்.எல்.ஏ.க்கள்

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டதையொட்டி மாணவர்களுடன் அமர்ந்து எம்.எல்.ஏ.க்கள் உணவு சாப்பிட்டனர்.

Update: 2023-08-25 18:45 GMT

காரைக்குடி

முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டதையொட்டி மாணவர்களுடன் அமர்ந்து எம்.எல்.ஏ.க்கள் உணவு சாப்பிட்டனர்.

காலை உணவு திட்டம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி குழந்தைகளுக்கு நேற்று காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதையடுத்து காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சிக்குட்பட்ட நெசவாளர் காலனி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். விழாவில் சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேவிமாங்குடி, சாக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஊர்க்காவலன், அலுவலர்கள் சரவணன், ராமநாதன், ஊராட்சி செயலர் அண்ணாமலை, மாவட்ட கவுன்சிலர் ராதாபாலசுப்பிரமணியன், அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர்கள் சொக்கலிங்கம், தேவி மீனாள், சுப்பிரமணியன், காங்கிரஸ் வட்டார தலைவர் கருப்பையா, வார்டு உறுப்பினர்கள் செங்கோல், கணபதி, விவேக், குழந்தைதெரசாள், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

உணவு ஊட்டிய எம்.எல்.ஏ.

மானாமதுரை அருகே ஆலம்பச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் தொடங்கி வைத்தார். மேலும் தமிழரசி ரவிக்குமார் 8 மாத குழந்தைக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார். முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன், யூனியன் தலைவர் லதா அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் ராஜாமணி அண்ணாதுரை, மேலநெட்டூர் ஊராட்சி தலைவர் சங்கீதா ராஜ்குமார், தாசில்தார் ராஜா, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் முத்துசாமி, வட்டார கல்வி அலுவலர்கள் பால்ராஜ், அஸ்மிதா பானு, தலைமை ஆசிரியர் சேவியர் இருதயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். மானாமதுரை பர்மா காலனி நடுநிலைப்பள்ளியில் நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தொடங்கி வைத்தார். இதில் துணை தலைவர் பாலசுந்தரம், நகராட்சி கவுன்சிலர் ராஜேஸ்வரி ஐயர் கலந்து கொண்டனர்.

திருப்புவனம்

திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய மேற்கு மற்றும் தெற்கு ஆரம்ப பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் லதாதேவி, பால்பாண்டி, நகர்செயலாளர் நாகூர்கனி, பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துல்லாகான், மன்ற உறுப்பினர்கள் ராமலெட்சுமி பாலகிருஷ்ணன், மாரிதாசன், பத்மாவதி முத்துக்குமார், சித்ராதேவி ஆறுமுகம், வேல்பாண்டி, ஜனதா செல்வபிரகாஷ், கண்ணன், பாலகிருஷ்ணன், கமிதாபானு சேக்முகமது, தலைமை ஆசிரியைகள் அமுதா, வசந்தி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கோட்டையூர் பேரூராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளில் இத்திட்டத்தினை பேரூராட்சி சேர்மன் கார்த்திக் சோலை தொடங்கி வைத்தார்.

சிங்கம்புணரி

சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட அணைக்கரை பட்டியில் உள்ள தொடக்க பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கலாவதி மயில்வாணன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜூ திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி செயலர் வடிவேல், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தேவகோட்டை

தேவகோட்டை 16-வது வார்டு நகராட்சி பள்ளியில் நகர் மன்ற தலைவர் கா.சுந்தரலிங்கம் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் மாணவ-மாணவிகளுடன் அவரும் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். ்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் பார்கவி, துண தலைவர் ரமேஷ், என்ஜினீயர் மீரான்அலி, மேலாளர் ராஜேஷ், நகர் மன்ற உறுப்பினர்கள் நிரோஜா சுந்தரலிங்கம், அய்யப்பன் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்