கடலூரில், மினி மாரத்தான் போட்டி

சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி கடலூரில், மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2023-08-26 18:45 GMT

கடலூர்

இளைஞர் தினம்

சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில் கடலூரில் நேற்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி, கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலரும், சுகாதார பணிகள் துணை இயக்குனருமான மீரா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாரா செலின் பால், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் வரவேற்றார். தொடர்ந்து மாவட்ட திட்ட மேலாளர் செல்வம், எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்று குறித்து விரிவாக விளக்கி கூறி பேசினார்.

மாரத்தான் போட்டி

இதையடுத்து கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியானது, பீச்ரோடு வழியாக தேவனாம்பட்டினம் சில்வர் பீச் வரை சென்றது. இந்த மினி மாரத்தானில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் நாடகப்போட்டி மற்றும் குரும்பட போட்டியும், பள்ளி மாணவர்களுக்கு வினாடி- வினா போட்டியும் நடத்தப்பட்டது. இதில் துணை இயக்குனர்(காசநோய்) கனகராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா, ரத்த பரிமாற்றுக்குழும அலுவலர் குமார், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி. மைய முதுநிலை மருத்துவர் தேவ்ஆனந்த், விருத்தாசலம் அரசு மருத்துவமனையின் ஏ.ஆர்.டி.மருத்துவ அலுவலர் சாமிநாதன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி. மைய மருத்துவ அலுவலர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்