வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம்

கடையம் வட்டார வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-06-17 16:19 GMT

கடையம்:

கடையம் வட்டாரத்தில் கடையம், பொட்டல்புதூர், ஆழ்வார்குறிச்சி பகுதி வியாபாரிகளுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டத்தை போலீசார் கடையத்தில் நடத்தினர். இந்த கூட்டத்திற்கு கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமை தாங்கினார். கடையம் வியாபாரிகள் சங்க தலைவர் சந்தோஷ், பொருளாளர் பிரம்மநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தடை செய்யப்பட்ட புகையிலையை விற்றால் எந்தவித பாரபட்சமும் இன்றி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கடையம் வியாபாரிகள் சார்பில் போக்குவரத்து நெரிசலான காலை, மாலை நேரங்களில் மெயின்ரோட்டில் போலீசார் பாதுகாப்பு நடவடிக்கை செய்து தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் அண்ணாமலை, நாகராஜன், பொட்டல்புதூர் வியாபாரிகள் சங்க செயலாளர் மாரியப்பன், நாராயணன், ஆழ்வார்குறிச்சி வியாபாரிகள் சங்க தலைவர் சிவராமன், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் பொன்னையா, துணைசெயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்