2-ம் நிலை, சிறை காவலர்களுக்கான உடல் திறன் தேர்வு

விருதுநகரில் 689 இரண்டாம் நிலை, சிறை காவலர்களுக்கான உடல் திறன் தேர்வு நடைபெற்றது.

Update: 2023-02-06 19:49 GMT


விருதுநகரில் 689 இரண்டாம் நிலை, சிறை காவலர்களுக்கான உடல் திறன் தேர்வு நடைபெற்றது.

உடல் திறன் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 689 இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கான உடல் திறன் தேர்வு நேற்று விருதுநகரில் தனியார் மேல்நிலைப்பள்ளி திடலில் தொடங்கியது.

இந்த தேர்வு வருகிற 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று 400 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவு, 1,500 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடைபெற்றது. இன்று மீதமுள்ள 289 பேருக்கு, சான்றிதழ் சாிபார்ப்பு, உடல் அளவு மற்றும் 1,500 மீட்டர் ஓட்டம் நடைபெறும்.

கண்காணிப்பு அதிகாரி

இதனை தொடர்ந்து நாளையும், நாளை மறுநாளும் 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தேர்வு நடைபெறும். தேர்வு குழுவின் கண்காணிப்பு அதிகாரியாக மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி கண்காணிப்பு பணியை மேற்கொண்டார். தேர்வு குழு தலைவர் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் மற்றும் உறுப்பினர்கள், சிறைத்துறை சூப்பிரண்டு கார்த்தி, மாவட்ட தீயணைப்புத்துறை கோட்ட அதிகாரி விவேகானந்தன் மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சூரியமூர்த்தி, சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலையில் தேர்வு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்