துணை முதல்-அமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு - உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2024-09-29 01:38 GMT

சென்னை,

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதல்-அமைச்சராக இன்று மாலை பதவியேற்க உள்ளார். தமிழக அமைச்சரவை மாற்றப்பட்டுள்ள நிலையில், இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ள அமைச்சர்களும் இன்று பதவியேற்க உள்ளனர்.

இந்த நிலையில், துணை முதல்-அமைச்சர் பதவி குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.

'துணை முதலமைச்சர்' என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், முதலமைச்சர் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம். அன்பும், நன்றியும்!"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்