கோடநாடு வழக்கு: சிபிஐ விசாரணை கோர உள்ளோம் - எடப்பாடி பழனிசாமி

கோடநாடு வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை கோர உள்ளோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2023-04-20 11:20 GMT

சென்னை,

சட்டப்பேரவை நிகழ்வுகள் இன்று கேள்வி நேரத்துடன் தொடங்கின. இதனைத் தொடர்ந்து காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி மற்றும் கொடநாடு விவகாரங்கள் தொடர்பாக சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம் நடைபெற்றன.

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். கோடநாடு வழக்கில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக அரசு. 90% வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கோடநாடு வழக்கை எதற்காக சிபிசிஐடிக்கு மாற்றினீர்கள்?

கோடநாடு பங்களா ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா இல்லை. அது வேறு ஒருவருடையது. முதல்-அமைச்சரின் பதில் விசித்திரமாக உள்ளது. கோடநாடு பங்களா யாருடையது என்பதை விசாரித்து கொள்ளுங்கள். கோடநாடு வழக்கை வைத்து எங்களை பயமுறுத்த முடியாது; மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை." என்று கூறினார்.

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது திமுக அரசு தான் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்