பெரம்பலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி; இன்று நடக்கிறது

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜமாபந்தி இன்று நடக்கிறது.

Update: 2023-05-15 19:20 GMT

பெரம்பலூர் மாவட்டத்தில் 1,432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து தாலுகாக்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெற உள்ளது. வேப்பந்தட்டை தாலுகாவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் வெங்கலம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட உடும்பியம், பூலாம்பாடி (கிழக்கு, மேற்கு), வெங்கனூர், தழுதாழை ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற உள்ளது. பெரம்பலூர் தாலுகாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் குரும்பலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட குரும்பலூர் (தெற்கு, வடக்கு), மேலப்புலியூர் (கிழக்கு, மேற்கு) மற்றும் லாடபுரம் (மேற்கு) ஆகிய கிராமங்களிலும், குன்னம் தாலுகாவில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் அலுவலர் தலைமையில் வடக்கலூர் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட திருமாந்துறை, பெண்ணகோணம் (வடக்கு, தெற்கு), வடக்கலூர் மற்றும் ஒகளூர் (மேற்கு) ஆகிய கிராமங்களிலும், ஆலத்தூர் தாலுகாவில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் செட்டிக்குளம் குறுவட்ட பகுதிக்கு உட்பட்ட நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிக்குளம், மாவிலங்கை, சிறுவயலூர் ஆகிய கிராமங்களிலும் ஜமாபந்தி நடக்கிறது, என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்