பாம்பன் தூக்கு பாலத்தில் அலுமினிய பெயிண்ட் அடிக்கும் பணி தீவிரம்
பாம்பன் தூக்கு பாலத்தில் அலுமினிய பெயிண்ட் அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகின்றது. சுமார் 105 ஆண்டுகளை கடந்தும் பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்து சிறப்பாக நடந்து வருகின்றது.
பாலத்தின் மையப்பகுதியில் உள்ள தூக்கு பாலத்தில் உப்புக்காற்றால் துருப்பிடிக்காமல் இருப்பதற்காக அலுமினிய பெயிண்ட் அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஆனால் இந்த பணியில் ஈடுபடுத்த பட்டுள்ள தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பு கவசங்கள் இல்லாமல் ஆபத்தான முறையில் வேலை பார்த்து வருகின்றனர்.