முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் ஆய்வு

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-02-25 18:45 GMT

ஓசூர்

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவில் தேர்த்திருவிழா வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை ஓசூர் தேர்பேட்டையில் உதவி கலெக்டர் சரண்யா, மாநகராட்சி ஆணையாளர் சினேகா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தேர் செல்லும் பாதை, பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா நிகழ்ச்சிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். பின்னர் ஓசூர் பச்சைக்குளத்தையும் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, சந்திரசூடேஸ்வரர் தேரோட்ட கமிட்டி தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.ஏ.மனோகரன், தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன், மாநகராட்சி கவுன்சிலர் பார்வதி நாகராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்