கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

Update: 2022-07-13 18:51 GMT

கீழக்கரை,

கீழக்கரையில் கடற்கரை சாலையில் பொருட்கள் கண்காட்சி நடந்துவருகிறது. இங்கு உணவு மற்றும் குளிர் பான கடைகளில் தயாரிக்கும் பொருட்கள் குறித்து உணவு கட்டுப்பாட்டு துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அனைத்து கடைகளிலும் உணவு உரிமம் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும். உணவில் அதிக வண்ணங்கள் சேர்க்கக்கூடாது.உபயோகித்த சமையல் எண்ணெய்யை திரும்ப திரும்ப பயன்படுத்தகூடாத என்று எச்சரிக்கை செய்தனர். தவறும் பட்சத்தில் அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்வதோடு அபராதம் விதிக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் எச்சரிக்கை செய்தனர்.மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் கீழக்கரை நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயராஜ் மற்றும் ராமநாதபுரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அதிகாரி தர்மர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்