காயல்பட்டினத்தில் ம.தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம்

காயல்பட்டினத்தில் ம.தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம் நடந்தது.

Update: 2023-07-09 18:45 GMT

ஆறுமுகநேரி:

திருச்செந்தூர் ஒன்றியம் மற்றும் காயல்பட்டினம் நகர ம.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவியை பதவி நீக்கக் கோரி கையெழுத்து இயக்கம்,காயல்பட்டினம் சீதக்காதி திடலில் நேற்று காலையில் தொடங்கியது. திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் பி.எஸ்.முருகன் தலைமை தாங்கினார்.

மாவட்டப் பொருளாளர் அமானுல்லா, காயல்பட்டணம் நகரச் செயலர் பத்ரூதீன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் எஸ்.ஏ.நைனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம் தொடங்கி வைத்தார். காயல்பட்டினம் நகர்மன்ற தலைவரும், நகர தி.மு.க. செயலாளருமான கே.ஏ.ஏஸ்.முத்து முகம்மது முதல் கையெழுத்து போட்டார்.இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வே.ரஞ்சன், ஆறுமுகநேரி பேரூர் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தி.மு.க.கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்