குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கும் கோவிந்தநத்தம் சாலை

திருமக்கோட்டை அருகே குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கும் கோவிந்தநத்தம் சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-09-26 19:00 GMT

திருமக்கோட்டை;

திருமக்கோட்டை அருகே உள்ள கோவிந்தநத்தம் சாலை பல ருடங்களாக கப்பிகள் பெயர்ந்து பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. சாலை குண்டும்- குழியுமாக உள்ளதால் இந்த வழியாக செல்லும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகி விடுகின்றன. குறிப்பாக மழைக்காலங்களில் இந்த சாலையில் அதிக அளவு தண்ணீா் தேங்குகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மிகுந்த இடையூறை சந்திக்கின்றன. எனவே திருமக்கோட்டை அருகே குண்டும்- குழியுமாக காட்சி அளிக்கும் கோவிந்தநத்தம் சாலையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்