ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு

இனியேனும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு கவர்னர் நடக்கவேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

Update: 2023-04-10 19:58 GMT

சென்னை,

ஆன்லை சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு நீண்ட இழுபறிக்கு பிறகு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதனை வரவேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவீட்டரில் கூறி இருப்பதாவது;

சட்டப்பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்ட மசோதாவுக்கு நீண்ட தாமதத்துக்குப்பிறகு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

இது தமிழ்நாட்டு மக்களுக்கும், அவர்களின் குரலாய் ஒலிக்கும் நம் முதலமைச்சர் அவர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல கவர்னரின் ஒப்புதலுக்கு திமுக எம்.பி.கனிமொழி வரவேற்றதுடன், இனியேனும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு கவர்னர் நடக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்