விநாயகர் சிலைகள் ஊர்வலம்

கூடலூர், பந்தலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

Update: 2023-09-24 19:45 GMT

கூடலூர்

கூடலூர், பந்தலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி

நாடு முழுவதும் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி கூடலூர், பந்தலூரில் இந்து முன்னணி உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் 173 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தேவர்சோலை, ஓவேலி, பாடந்தொரை, கோத்தர்வயல், தொரப்பள்ளி, ஸ்ரீமதுரை, முதுமலை உள்ளிட்ட இடங்களில் இருந்து 89 விநாயகர் சிலைகள் கூடலூர் நகராட்சி அலுவலகம் முன்பு கொண்டு வரப்பட்டது.

ஊர்வலம்

அங்கிருந்து மாலை 3 மணிக்கு ஊர்வலம் தொடங்கியது. இதற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சண்முகம் தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் வேலுச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பாண்டியாற்றில் கரைக்கப்பட்டது. இதையொட்டி கூடலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

பந்தலூர்

இதேபோன்று பந்தலூரில் 84 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. இவை பொன்னானி ஆற்றில் கரைக்கப்பட்டது. அங்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தரராஜன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்