மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

Update: 2022-09-03 16:46 GMT

வேளாங்கண்ணி

கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஷீபாபிளவர்லெட் தலைமை தாங்கினார். கீழையூர் ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா சத்யராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கீழையூர் ஒன்றிய வட்டார வேளாண்மை வளர்ச்சிகுழு தலைவரும், வேளாங்கண்ணி முதல் நிலை சிறப்பு பேரூராட்சி துணைத் தலைவருமான தாமஸ் ஆல்வா எடிசன் கலந்துகொண்டு 220 பள்ளி மாணவ-மாணவகளுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரபிக், வட்டார வேளாண்மை வளர்ச்சிகுழு உறுப்பினர் மரிய சார்லஸ், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் விஷாந்தினி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்